என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தாக்குதலை நிறுத்தம்
நீங்கள் தேடியது "தாக்குதலை நிறுத்தம்"
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் மீது நேற்றிரவு பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். #PakistanTroops #SambaCeasefire #JammuAndKashmir
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 700 முறை அது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த எல்லைப்பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடியை கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் படையினர் நேற்றிரவு மீண்டும் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் மீது நேற்றிரவு பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய படையினர் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை. #PakistanTroops #SambaCeasefire #JammuAndKashmir
சர்வதேச எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலை நிறுத்தும்படி இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #PakistanTroops #BSF #PleadForCeasefire
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 700 முறை அது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த எல்லைப்பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடியை கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது. #PakistanTroops #BSF #PleadForCeasefire
×

X